வெகுவிரைவில் சுயாதீன தேசிய மகளிர் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும்: பிரதமர்

Date:

சுயாதீன தேசிய மகளிர் ஆணைக்குழு வெகுவிரைவில் ஸ்தாபிக்கப்படும் என்று பிரதமர்  ஹரிணி  அமரசூரிய  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (08) நடைபெற்ற  2025 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சுதந்திரத்துக்கு பின்னராக 75  வருட காலத்தையும் நாங்கள் விமர்சிக்கவில்லை. அரசியல் கட்டமைப்பையே  சாபம் என்கிறோம். இலவச கல்வி மற்றும் இலவச சுகாதாரம் ஆகியவற்றால்  பெண்கள் முன்னேற்றமடைந்துள்ளார்கள்.  ஆசிய வலய நாடுகளில் இலங்கையின் பெண்களின் கல்வி தரம் முன்னிலையில் உள்ளது.

பாரிய போராட்டத்தின் மத்தியில் தான்  இலவச கல்வி உரிமை பெற்றுக்கொள்ளப்பட்டது. ஒரு காலத்தில் பெண்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டிருந்தது. அதற்கு எதிராக பெண்கள் போராடி இன்று  சகல துறைகளிலும் முன்னணியில் உள்ளார்கள். இந்த முன்னேற்றத்தை வலுப்படுத்த வேண்டும்.

கல்வித்துறையை பொறுத்தவரையில் தற்போது  ஆண்களின்  கல்வி நிலை  பின்னடைந்துள்ளதை  அவதானிக்க  முடிகிறது. இது பாரியதொரு பிரச்சினையாகும். கல்வித்துறையின் ஊடாகவே ஆண் – பெண் சமத்தவத்தை உறுதிப்படுத்த முடியும். ஆகவே ஆண்களின் கல்வி நிலை குறித்து விசேட கவனம் செலுத்தப்படும்.

சுயாதீன தேசிய மகளிர்  ஆணைக்குழு வெகுவிரைவில் ஸ்தாபிக்கப்படும். அரசியலமைப்பு  பேரவைக்கு இந்த ஆணைக்குழுவுக்கான நியமனங்கள் தொடர்பான  பரிந்துரைகள்  கிடைக்கப்பெற்றுள்ளன. வெகுவிரைவில் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும் என்றார்.

Popular

More like this
Related

சில மாவட்டங்களுக்கு மழையுடனான வானிலை!

வட மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் அவ்வப்போது சிறிதளவு மழை...

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...