இரு கண்களிலும் பார்வை இழந்த நிலையில் ஜும்ஆ பிரசங்கம் செய்து தன்னுடைய திறமையை உலகுக்கு வெளிப்படுத்திய அஷ்ஷெய்க் அர்கம் ஹசனி!

Date:

காத்தான்குடி செயின் மெளலானா ஜும்மாப் பள்ளிவாயலில் நேற்று(25) (வெள்ளிக்கிழமை) ஜும்ஆப் பேருரை சிறப்பாக நடைபெற்றது.

இரண்டு கண்களும் பார்வையற்ற விஷேட தேவையுடைய அறிஞர் அஷ்ஷெய்க் MJM அர்கம் ஹசனி அவர்கள் இந்த ஜும்ஆப் பயானை நிகழ்த்தி அனைவரையும் ஈர்த்தார்.

மனிதாபிமானம் மற்றும் ஒற்றுமையை மையமாக கொண்டு வழங்கிய அவரது உரை, சிறப்பாகவும் ஆழமாகவும் இருந்தது. பார்வையிழந்திருந்தாலும் உலகத்தை மிக தெளிவாக புரிந்து வைத்திருக்கும் அவரது ஆற்றல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஜும்ஆ முடிவில், அர்கம் ஹசனி அவரை நேரில் சந்தித்த பள்ளிவாயல் நிர்வாகிகள், எதிர்வரும் ஜும்ஆக்களில் போதைவஸ்துக்கள் எதிர்ப்பு பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர். இதற்கு அவரும் ஒப்புதல் வழங்கினார்.

இத்தகைய அருமையான ஜும்ஆப் பேருரையை ஏற்பாடு செய்த செயின் மெளலானா பள்ளிவாயல் நிர்வாகத்திற்கு சமூகம் சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்படுகின்றன.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...