பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், மறைந்த பரிசுந்த பாப்பரசர் பிரான்சிஸின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்வில் பேராயருடன் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய ஜோசப் இந்திக, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக நேற்று (23) கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் வத்திக்கானுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு ஏப்ரல் 26ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.