உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பெறுபேற்று அட்டவணையை தரவிறக்கம் செய்யவும் பார்ப்பதற்கும் வசதிகள்

Date:

அனைத்து பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களும் இன்று (28) முதல் பெறுபேற்று அட்டவணையை தரவிறக்கம் செய்யவதற்கும், பார்ப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, https://onlineexams.gov.lk/eic என்ற இணையத் தளத்திற்குச் சென்று தேசிய அடையாள அட்டை எண்ணை உள்ளிடுவதன் மூலம் பெறுபேற்று அட்டவணையை தரவிறக்கம் செய்ய அல்லது பார்வையிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளங்களான http://www.doenets.lk மற்றும் http://www.results.exams.gov.lk ஆகியவற்றிலும் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கிடையில், சகல அதிபர்களுக்கும் https://onlineexams.gov.lk/eic எனும் இணைப்பினூடாக பெறுபேற்றைப் பெற்றுக்கொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (User Name) கடவுச்சொல் (Password)என்பவற்றை பயன்படுத்தி உரிய பாடசாலைகளின் பெறுபேற்று அட்டவணைகளை தரவிறக்கம் செய்து அச்சுப் பிரதியொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மாகாணம், பிராந்தியத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளின் பெறுபேற்றை https://onlineexams.gov.lk எனும் இணைப்பினூடாக தரவிறக்கம் செய்து பார்வையிடவும் முடியும்.

உரிய பாடசாலைகளின் பரீட்சை பெறுபேற்று அட்டவணை மீளாய்வு செய்யப்பட்ட பெறுபேறு வெளியிடப்பட்ட பின்னர் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...