உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவடைந்துள்ளது: பெப்ரல் அமைப்பு

Date:

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்கியதிலிருந்து எந்தவொரு பாரதூரமான சம்பவங்களும் பதிவாகவில்லை என்று தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும், அரசு சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததாக 20 முறைப்பாடுகளும், தனிப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக 15 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மீதான பொதுமக்களின் ஆர்வமும் குறைவாக இருப்பதாக பெப்ரல் கண்காணிப்பாளர்களும் தமக்குத் தெரிவித்ததாக அதன் நிர்வாகப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.

இதற்கிடையில், தேர்தல்கள் பணிகளுக்காக சுமார் 4,000 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தபால்மூல வாக்களிப்புகளை கண்காணிக்க 200 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...