பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

Date:

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை கைது செய்ய கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

இந்த குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர் போலி அடையாளத்துடன் பல்வேறு பிரதேசங்களில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரின் விபரங்கள் :

1.பெயர் – ரஃபிக் மொஹொமட் ஃபாரிஸ்

2. தேசிய அடையாள அட்டை இலக்கம் – 761850466v

3. பிறப்பு – 1976.07.03

இந்த புகைப்படங்களில் உள்ள நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவின் 071 – 8591735 அல்லது 071 – 8596507 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடியே 65 இலட்சம் ரூபா பெறுமதியான ஜீப் வாகனம் ஒன்றை திருடியமை மற்றும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வாகனம் ஒன்றை விற்பனை செய்யவிருப்பதாக கூறி ஒரு கோடியே 25 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...