கொவிட் காலப்பகுதியில் பலவந்தமாக எரிக்கப்பட்ட ஜனாஸாக்களை நினைவுகூரும் வகையிலும் அதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு கூறும் வகையிலும் இந்த கோர நிகழ்வு நடைபெற்று 5 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டும் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு இன்று கொழும்பு மரைன் கிராண்ட் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ், எதிர்க்கட்சி தலைவர் சஜித், பிரேமதாச அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள், புத்திஜீவிகள், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலர் கலந்துகொண்டனர்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையில் சிவில் சமூகங்கள் பல இணைந்து கூட்டாக இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வு தொடர்பான படங்கள்…!