க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் கோரல்

Date:

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

குறித்த விடயத்தினை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, மே மாதம் 02 ஆம் திகதி முதல் மே 16 ஆம் திகதி வரை குறித்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 149,964 பாடசாலைப் பரீட்சார்த்திகள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் 27,624 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

177,588 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 64,73% பேர் பல்கலைக்கழக நுழைவுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.

 

Popular

More like this
Related

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...