உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு மே 05, 06 பாடசாலைகளுக்கு விடுமுறை

Date:

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலையிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மே 05, 06 ஆம் திகதிகளில் மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, வாக்குச் சாவடிகளாக அமைக்கப்படும் பாடசாலைகளை மே 04ஆம் திகதி அந்தந்த கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன், தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கான மேசைகள், கதிரைகள், பாடசாலை மண்டபங்களுக்குள் செல்வது உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை வழங்குவதை உறுதி செய்யுமாறு அனைத்து வலயக் கல்வி பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கும் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

எதிர்வரும் மே 06ஆம் திகதி நாடு முழுவதும் (ஒரு சில சபைகளைத் தவிர) உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, மே 07 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகளை திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் மீண்டும் கட்டணம் அறவிடப்படும்

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (டிசம்பர் 4) முதல் மீண்டும் கட்டணம் அறவிட...

சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து ஆராய்வு

அனர்த்த நிலைமை காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து...

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்: சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் கைகோர்ப்பு

டிட்வா சூறாவளிக்குப் பின்னர் நிலைமையை மதிப்பிடுவதற்கும் நிவாரணம், மீட்புப் பணிகள் மற்றும்...

டித்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சவூதி அரேபிய தூதரகம் இரங்கல்

'டித்வா' சூறாவளி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு...