நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

Date:

மத்திய , சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேல் மாகாணத்திலும்  அத்துடன் காலி, மாத்தறை மற்றும் புத்தளம்  மாவட்டங்களிலும் காலை வேளையில்  மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ  மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களி்லும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கண்டி, நுவரெலியா, கேகாலை, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு ,காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய  கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல்  பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 கிலோமீற்றர் வேகத்தில்  தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 – 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ் வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

Popular

More like this
Related

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...

இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் விஜித ஹேரத்!

‘ரைசினா கலந்துரையாடல் 2026’ (Raisina Dialogue 2026) மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா...

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...