கண்டி ஶ்ரீ தலதா தரிசனத்திற்கு வந்தவர்களால் பத்து நாட்களில் சுமார் 600 மெற்றிக் தொன் குப்பைகள் தேக்கம்..!

Date:

புத்தபெருமானின் புனித தந்த தாதுவை வழிபடுவதற்காக கண்டி தலதா மாளிகைக்கு பத்து நாட்களில்,குவிந்த பக்தர்களால் 600 தொன் குப்பைகள் மிகவும் ஒழுங்கற்ற முறையில் சுற்றுச்சூழலில் வீசப்பட்டுள்ளதாக கண்டி மாநகர சபையின் நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளரும், திடக்கழிவுப் பிரிவின் தலைவருமான நாமல் தம்மிக்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதில் அதிகளவு பொலித்தீன் பைகள் காணப்படுகின்றன.  இந்தக் குப்பைகளுக்கு மத்தியில் பிளாஸ்டிக் பைகளில் வீசப்பட்ட மலம் மற்றும் சிறுநீர் கூட இருப்பதாகவும், அவற்றைப் பிரிப்பது கூட மிகவும் கடினமான பணியாகிவிட்டது என்றும் திசாநாயக்க தெரிவித்தார்.

புனித தந்த தாதுவை வழிபடுவதற்காக கடைசி நாளான இன்று (27) நண்பகல் 12.00 மணி வரை, 528 தொன் குப்பைகள் குஹாகொட குப்பை கிடங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

இவ்வளவு பெரிய அளவிலான குப்பைகள் குவிய முக்கிய காரணம், மிகவும் ஒழுங்கற்ற முறையில் அன்னதானம் விநியோகிக்கப்பட்டதுதான் என்று திசாநாயக்க கூறினார். பக்தர்களுக்கு தேவையற்ற அன்னதானம் விநியோகம் செய்யப்பட்டதால், அவர்களுக்குக் கிடைத்த பல உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் சாலையில் கிடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இனிமேல், நன்கொடைகள் வழங்கும் தனிநபர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இதுபோன்ற செயல்பாடுகளை மேற்கொள்ளும்போது முறையான அறிவுறுத்தல்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...