நாட்டின் சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும்

Date:

மேற்கு, வடமேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (24) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் காலை வேளையில் சில இடங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படலாம்.

காற்று மேற்கு அல்லது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும், காற்றின் வேகம் (25-35) கி.மீ. வரை இருக்கும். சிலாபத்திலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 45 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...