இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் அமைந்திருக்கும் தலைசிறந்த வேளாண்மைக் கல்வி நிறுவனங்களுள் ஒன்றான பிதான் சந்திர கிருஷி விஸ்வவித்யாலயாவின் வேளாண்மைப் பீடத்தின் நுழைவாயில் அறிவிப்புப் பலகையில் இஸ்லாமிய வெறுப்பையும், தரக்குறைவான கருத்துகளையும் தாங்கிய ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ‘நாய்கள் மற்றும் முஸ்லிம்கள் அனுமதிக்கப்படவில்லை. அனைவரின் பார்வையும் பஹல்காம் மீதுதான். பயங்கரவாதம் என்பது இஸ்லாம்.’ இந்த தகவலை மாக்தூப் ஊடகம் உறுதி செய்துள்ளது.
பெயர் எதுவும் குறிப்பிடப்படாத காரணத்தால், இந்த சுவரொட்டியை ஒட்டியவர்கள் யார் என்று பல்கலைக்கழகத்தின் மாணவர்களாலோ அல்லது பணியாளர்களாலோ கண்டறிய முடியவில்லை.
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது 26 பேர் கொல்லப்பட்ட கொடிய தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் பல மூலைகளிலும் பரவலான இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.