நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு உத்தரவு !

Date:

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களில்  அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி குறித்த பகுதிகளில் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளையும் நாளை (02) வரை இடைநிறுத்தி இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவர் மொஹமட் லபார் தாஹீர் மற்றும் கே.பி.பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் அடங்கிய அமர்வு முன்னிலையில் குறித்த மனுக்கள் இன்று (01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபை  உட்பட பல உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து பல கட்சிகளால் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அதில், புத்தளம் மாநகர சபை மற்றும் கல்பிட்டி பிரதேச சபைக்கான வேட்புமனு தாக்கல்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் சட்டத்தரணி அஜிரா அஸ்வர் தெரிவிக்கையில்,

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் தூய தேசத்திற்கான கட்சிக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், புத்தளம் மாநகர சபை மற்றும் கல்பிட்டி பிரதேச சபைக்கான வேட்புமனு தாக்கல்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதற்குரிய மேன்முறையீடாக கடந்த 25 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தோம். இதனடிப்படையில், செவ்வாய்க்கிழமை (01) குறித்த வழக்கு பரிசீலிக்கப்பட்டு அதனடிப்படையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் இதற்கான தற்காலிக தடை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. நாளை புதன்கிழமை (02) ஆம் திகதி வரை எந்த வித தேர்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளக்கூடாது   உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்த தூய தேசத்திற்கான கட்சியின் தலைவர் எஸ். எம் .இஷாம் மரிக்கார் தெரிவிக்கையில்,

தூய தேசத்திற்கான கட்சி புத்தளம் மாநகர சபையிலும், கல்பிட்டி பிரதேச சபையிலும் இரட்டைக் கொடி சின்னத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தது. அவற்றை நிராகரித்தமைக்காக நாங்கள் அதனை மீள் பரிசோதனை செய்ய வேண்டும் என்று வழக்குத் தாக்கல் செய்திருந்தோம். அந்த வழக்கு செவ்வாய்க்கிழமை (1) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்காக எடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் ஒரு நியாயம் உள்ளதை மிகத் தெளிவாக கூறி இருக்கிறார்கள். நாளை இது சம்பந்தமான தெளிவான முடிவொன்று எடுக்கப்படும். அதுவரைக்கும் புத்தளம் மாநகர சபை, கல்பிட்டி பிரதேச சபை ஆகிய இரு சபைகளிலும் ஏனைய சபைகளிலும் இந்த பிரச்சினை சம்பந்தமான தீர்வு எடுக்கும் வரைக்கும் தேர்தலுக்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்குமாறு தற்காலிக தடை உத்தரவொன்றை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது என்றார்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...