பேராசிரியர் குர்ஷித் அஹ்மத் காலமானார்

Date:

Leicester, Mark feild இல் உள்ள Islamic Foundation இன் ஸ்தாபகரும் முன்னாள் தலைவருமான பேராசிரியர் குர்ஷித் அஹ்மத் நேற்று தனது 93 ஆவது வயதில் காலமானார்.

பேராசிரியர் குர்ஷித் அஹ்மத் இஸ்லாமிய பொருளாதாரம், நிதியியல், நவீன இஸ்லாமிய இயக்கங்கள் விவகாரங்களில் முன்னணி இஸ்லாமிய அறிஞராகத் திகழ்ந்தார்.

இஸ்லாமிய பொருளாதாரத்தின் தந்தை எனக் கருதப்படும் இவர் 70 க்கு மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்திலும் உருதிலும் எழுதி உள்ளார்.

இவரது பல நூல்கள் பல்வேறு மொழிகளுக்கும் மொழி பெயர்க்கப்பட்டு இவரது புலமை உலகமயப்படுத்தப்பட்டுள்ளது. 1973 இல் குர்ரம் முராதுடன் இணைந்து இவர் உருவாக்கிய இஸ்லாமிய நிலையம் நடுநிலை இஸ்லாமிய சிந்தனைக்கான மையமாக விளங்குகிறது.

பிரிட்டிஷ் இந்தியாவில் 1932 இல் பிறந்த பேராசிரியர் குர்ஷித் அஹ்மத், பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தார். பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமியின் பிரதித் தலைவராகவும் செயற்பட்டார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...