போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு நாளை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Date:

மறைந்த போப்  பிரான்சிஸின் இறுதிச்சடங்கிற்கான கடைசி நிமிட ஏற்பாடுகளை வத்திகான் இன்று வெள்ளிக்கிழமை (25) முழுவீச்சில் செய்துவருகிறது.

போப் பிரான்சிஸுக்கு அஞ்சலி செலுத்த பெருந்திரளான கூட்டம் செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் ஒன்றுகூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்குப் போப் ஃபிரான்சிஸின் நல்லுடல் திறந்த சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , உக்ரேனிய ஜனாதிபதி விளாடிமிர் ஸெலென்ஸ்கி உட்பட ஐம்பது நாடுகளின் தலைவர்களும் 10 மன்னர்களும் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நாளை சனிக்கிழ்மை நடைபெறவிருக்கும் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

அவர்கள் அனைவரும் இன்று  ரோம் சென்றடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தது 130 வெளிநாட்டுப் பேராளர்கள் போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வர்.

செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இத்தாலிய, வத்திகான்  அதிகாரிகள் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளனர். கூடுதல் சோதனைகள் இன்றிரவு இடம்பெறும்.

ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் வரிசையாக மணிக்கணக்காக நின்று போப்  பிரான்சிஸுக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

இறுதிச்சடங்கு முடிந்து போப்  பிரான்சிஸின் நல்லுடல் அவருக்கு மிகவும் பிடித்தமான ரோமின் சென்டா மரியா மஜியோரே தேவாலயத்தில் அடக்கம் செய்யப்படும்.

ஏப்ரல் 27ஆம் திகதியிலிருந்து பொதுமக்கள் போப் ஃபிரான்சிஸின் கல்லறைக்குச் செல்லலாம். அதையடுத்து புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகள் தொடங்கும்.

80 வயதுக்குக் கீழுள்ளோர் மட்டுமே அடுத்த போப்பைத் தேர்வு செய்ய வாக்களிக்கலாம். தற்போது 135 கார்டினல்கள் அதற்குத் தகுதி பெறுகின்றனர்.

Popular

More like this
Related

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...