மத நல்லிணக்கத்தின் அழகிய தருணம்: பெருநாள் தொழுகைக்கு பின் முஸ்லிம்களுக்கு இனிப்பு, தண்ணீர் வழங்கிய இந்துக்கள்!

Date:

முஸ்லிம்களின் புனித ரமழான் பெருநாள், உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் சமூகம் கொண்டாடும் முக்கிய பண்டிகையாகும்.

இந்த பெருநாளை முன்னிட்டு ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில் உள்ள பள்ளிவாசல்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்தினர்.

தொழுகை முடிந்ததும், அங்கு ஏற்பட்ட ஒரு அற்புதமான நிகழ்வு சமூக ஒற்றுமையின் அழகிய தருணமாக அமைந்தது.

பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வெளியே வந்த இஸ்லாமிய சகோதரர்களுக்கு, அங்கிருந்த சில இந்து சமூகத்தினரால் குளிர்ந்த தண்ணீரும் இனிப்புக்களும் வழங்கப்பட்டன.

தண்ணீர் பெற்ற முஸ்லிம் சகோதரர்கள் இந்த நற்செயலுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

‘சமூகத்தினருக்குள் ஒற்றுமை இருந்தாலே நாடு இன்னும் உயர்ந்த முறையில் வளர்ச்சி அடையும். மதங்களின் வேறுபாடு இல்லாமல் சகோதரத்துவம் வளர வேண்டியது அவசியம்.

‘இது உண்மையான சகோதரத்துவத்தின் சிறந்த எடுத்துக்காட்டு. வெறும் பண்டிகை கொண்டாட்டமாக அல்ல, ஒற்றுமையை முன்னிறுத்தும் ஒரு நிகழ்வாகவும் இது விளங்குகிறது.

இந்த அழகிய தருணங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பலரும் இதை பகிர்ந்து பாராட்டும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுபோன்ற நிகழ்வுகள் மத நல்லிணக்கத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் உதாரணமாக அமைகின்றன.

 

 

 

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...