தொழில்நுட்பத்திற்கான இஸ்லாமிய நிறுவனத்தினால் (Islamic Institute of Information Technology – IIIT) மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நடாத்தப்படும் (Diploma in Leadership and Management Studies -LMS) 50 நாட்கள் வதிவிட செயலமர்வின் 8ஆம் தொகுதி மாணவர்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு 19ஆம் திகதி சனிக்கிழமை மாதம்பை இஸ்லாஹிய்யா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இஸ்லாஹிய்யா மாணவர்கள் தேசிய கீதத்தை இசைத்தனர். இஸ்லாஹிய்யா தொடர்பான வீடியோ காணொளி ஒன்றும் காண்பிக்கப்பட்டது.
TVEC அங்கீகாரம் பெற்ற மாதம்பை IIIT நிறுவனத்தின் தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவக் கற்கைகள் டிப்ளோமா (Diploma in Leadership and Management Studies -LMS) கற்கைநெறி தொடர்பான அறிமுகத்தை IIIT மற்றும் இஸ்லாஹிய்யா நிறுவனத்தின் முகாமையாளர் கலாநிதி ஏ. ஏ. எம். ஸாதிக் (இஸ்லாஹி) வழங்கியதுடன் அது தொடர்பான விளக்கங்களையும் தெளிவுபடுத்தினார்.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக ஓய்வுபெற்ற இலங்கை விமானப்படை அதிகாரி வீரபுத்ர, தேசமான்ய, வின்க் கொமாண்டரும் Filotex Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் முகாமையாளருமான சீபா ஹனீபா அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் மாணவர்களுக்கு சுவாரஸ்யமான விதத்தில் ஒழுக்கம், பண்பாடு, தலைமைத்துவம் தொடர்பான உரையொன்றையும் நிகழ்த்திச் சென்றார்.
இறுதியாக வருகை தந்த மாணவர்களின் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை இவ் வதிவிட பாடநெறிக்கு இணைத்து கொண்டமை தொடர்பான தங்களது காத்திரமான கருத்துக்களையும் தெரிவித்தனர்.
இவ்வருடம் விஷேடமான, தற்காலத்துக்கு தேவையான பல உள்ளடக்கங்களுடன் வடிவமைக்கப்பட்ட LMS (Diploma in Leadership and Management Studies) கற்கைநெறியில் அறுபதுக்கும் அதிகமான மாணவர்கள் உற்சாகமாக இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.











