மேற்கு வங்கத்தில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: 3 பேர் பலி; 150-க்கும் அதிகமானோர் கைது

Date:

மேற்கு வங்கத்தில் வக்பு  திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர். பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

சனிக்கிழமை மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் மாணவர் இஜாஸ் அகமது, ஹர்கோவிந்த தாஸ் மற்றும் அவரது மகன் சந்தன் தாஸ் என 3 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு வட்டாரங்கள்  தெரிவித்தன.

இந்த வன்முறையில் பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வீடு, கடைகள் சூறையாடப்பட்டன. சில இடங்களில் கோயில் மற்றும் மசூதி குறிவைக்கப்பட்டன.

இந்த விவகாரத்தில் குறைந்தது 150 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஏ.என்.ஐ. செய்தி கூறுகிறது.

மக்கள் அமைதியை கடைபிடிக்குமாறு மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார். அரசியல் லாபத்துக்காக வன்முறைகளை தூண்டாதீர்கள்,” என அவர் தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தனது வாக்கு வங்கியை திருப்திப்படுத்த வன்முறையை தூண்டுவதாக திரிணாமுல் காங்கிரஸ் மீது பாஜக குற்றம் சாட்டுகிறது.

வன்முறையை அடுத்து மத்திய பாதுகாப்புப் படைகளை உடனடியாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துமாறு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வக்பு திருத்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்து வாக்களித்த திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கத்திலும், கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளத்திலும் வன்முறை நடந்திருப்பது வருத்தமளிக்கிறது.

வக்பு சட்டத்தை எதிர்க்கும் இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களில் சட்டம், ஒழுங்கை கெடுக்கும் வகையில் பாஜக சார்பு காவல் அதிகாரிகள் திட்டமிட கூடும்.

ஆர்ப்பாட்டங்களை திட்டமிடும் கட்சிகள்/அமைப்புகள் மிக கவனமாக இருக்க வேண்டும்.

கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் அடையாள எதிர்ப்பு போராட்டங்கள், உள்ளரங்கு கூட்டங்கள் மட்டுமே போதும். மற்றபடி மாநில அரசுகளே சட்டமன்ற தீர்மானம்,உச்சநீதிமன்ற வழக்கு என நமக்கு உறுதுணையாக இருக்கின்றன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
பேரணிகளும், எதிர்ப்பு போராட்டங்களும் நடத்தப்பட வேண்டியவை சட்டம் கொண்டு வந்த பிஜேபி ஆளும் மாநிலங்களில், நாட்டின் தலைநகரில். இதை கூட ஒழுங்குபடுத்த முடியாத,தெரியாத,வக்கற்ற இன்னும் கூட அகில இந்திய ஒருங்கிணைப்பற்ற சமூகமாக இந்திய முஸ்லிம் சமூகம் இருக்கிறது என்று நினைத்தால் வயிறு எரிகிறது.
மூலம்: பிபிசி

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...