மொஹமட் ருஷ்தி பிணையில் விடுதலை !

Date:

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தில்  தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்தி பிணையில்  விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் கடந்த 22 ஆம் திகதி வணிக வளாகத்தில் கைது செய்யப்பட ருஷ்தி பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அத்தனகல்ல நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (07) ஆஜர்படுத்திய நிலையில், அவரை நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

கொம்பனித்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனமொன்றில் பணியாற்றும் ருஷ்தி  காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் அநியாயங்களுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய காரணத்தினால் கைது செய்யப்பட்டார்.

ருஷ்தியின் கைது தீவிரவாதக் கருத்துக்களுடன் தொடர்புடையது என்று பொலிஸார் தெரிவித்ததுடன மேலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் மூன்று மாதக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இளைஞரை விடுதலை செய்யுமாறு பொதுமக்கள் போராட்டங்களையும் முன்னெடுத்திருந்ததுடன் ருஷ்தியின் கைது மற்றும் தடுப்புக்காவல் குறித்து அம்னஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புக்களும் கவலைகளை எழுப்பின.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...