வாக்காளர் அட்டைகள் இன்று தபால் நிலையங்களுக்கு!

Date:

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்று (16) அந்தந்த தபால் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.

அதற்கமைய, ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட நாளாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

இது குறித்து தபால் மாஅதிபர் ருவன் சத்குமார மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு வீட்டிற்கும் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், ஏப்ரல் 29 ஆம் திகதி வரை இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.

 

இதற்கான விசேட நாளாக ஏப்ரல் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஒதுக்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த முக்கிய ஆவணத்தை கையொப்பம் பெற்று வீட்டில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென்பதால் விடுமுறை தினத்தை இதற்காக தெரிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

எனவே வீட்டில் உள்ள யாராவது ஒருவர் வீட்டில் தங்கியிருந்து கையொப்பமிட்டு அதைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஏப்ரல் 29 ஆம் திகதிக்குப் பின் விநியோகிக்கப்படாத வாக்காளர் அட்டைகள் இருக்க வாய்ப்புள்ளது. அவற்றை அருகிலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தி பெறக்கூடிய வசதியை மேற்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...