விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்கள் தங்களது வாக்குச் சீட்டை அடையாளமிடுவதற்கு வாக்கெடுப்பு நிலையத்திற்கு உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்வது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, விசேட தேவையுடைய வாக்காளர்களுடன் வாக்கெடுப்பு நிலையத்திற்கு செல்லும் உதவியாளர்கள், 18 வயதை பூர்த்தி செய்த ஒருவராக இருத்தல் வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆனால், அவர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக இருத்தல் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சி ஒன்றின் அதிகாரமளிக்கப்பட்ட முகவராகவோ வாக்கெடுப்பு நிலையத்தின் முகவராகவோ இருத்தல் கூடாது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

விசேட தேவையுடைய வாக்காளர்கள் தங்களது உதவியாளர்களை உடன் அழைத்துச் செல்ல தகுதி சான்றிதழல் ஒன்றை உரிய வாக்கெடுப்பு நிலையத்தின் அலுவலருக்கு சமர்ப்பித்தல் வேண்டும் என்பதுடன், தகுதி சான்றிதழலை பெற்றுக்கொள்ள தேவையான விண்ணப்பங்களை கிராம அலுவலர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் அல்லது www.elections.gov.lk என்ற தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) – பஹன மீடியா குழுமத்திற்குமிடையே நடைபெற்ற சினேகபூர்வ சந்திப்பு!

கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக "தூய இலங்கை" எனும் மகுடம் தாங்கி...

வாகன இறக்குமதி மூலம் 512.5 பில்லியன் ரூபாய் வரி வருமானம்!

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 316,000 வாகனங்கள் இறக்குமதி...

சமச்சீரற்ற ஒத்திசைவு: இலங்கை தனது பன்முகத்தன்மையை ஒரு பலமாக மாற்ற முடியுமா?

-ரிசா யெஹியா சிரேஷ்ட பொறியியலாளர். இலங்கையில் மீண்டும் மீளும் சமூகத் தகராறுகள் உடனடி பிரச்சினையை...

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

தென் கொரியா மற்றும் இஸ்ரேலில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்புகளுக்கு மேலாக,...