பலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை (18) நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
‘கித்துசர ‘ அமைப்பினரின் ஏற்பாட்டில் ‘பெரிய வெள்ளிக்கிழமையை அர்த்தமுள்ளதாக்குவோம் ‘ என்ற தொனிப் பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
18 மாத காலமாக தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கப்பட்டதுடன் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுலோக பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கத்தோலிக்க, இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் மூவின மக்களும் கலந்து கொண்டனர்.