வக்ஃப் கருப்புச் சட்டத்துக்கு எதிரான அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியப் போராட்டங்கள் பெஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மூன்று நாள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இப்போது மறுபடியும் நாடு முழுவதும் போராட்டங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன.
இந்த நிலையில் வக்ஃப் கருப்புச் சட்டத்தைக் கண்டித்து லைட்ஸ் ஆஃப் போராட்டத்தை வாரியம் அறிவித்துள்ளது.
இதன்படி ஏப்ரல் 30 அன்று இரவு 9 மணி முதல் 9.15 வரை நாடு முழுவதும் கடைகள், வீடுகள், நிறுவனங்கள், மால்கள், உணவு விடுதிகள், பள்ளிவாசல்கள் என எல்லா இடங்களிலும் விளக்குகள் அணைக்கப்படும்.
இந்த விளக்கு அணைப்பு போராட்டம் தான் இன்று நாடு முழுவதும் மிகப் பெரும் அளவில் பேசுபொருளாக ஆகியிருக்கின்றது.
தமிழ்நாட்டிலும் இது மிகப் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது உப்பு சத்தியாகிரகம் என்கிற புதுமையான போராட்ட உத்தியை காந்தியடிகள் மேற்கொண்டார். அது ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு ஓடுவதற்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது.
இப்போது வக்ஃப் கருப்புச் சட்டத்துக்கு எதிராக வாரியம் அறிவித்துள்ள லைட்ஸ் ஆஃப் போராட்டம் என்கிற புதுமையான போராட்ட உத்தியும் பெருவெற்றி பெறும். வக்ஃப் சட்டம் குப்பைத் தொட்டியில் வீசப்படுவதற்கு வழி வகுக்கும் என்றே மக்கள் பரவலாகப் பேசிக் கொள்கின்றார்கள்.
விளக்கை அணைப்பதன் மூலமாக நம்முடைய எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்துகின்ற உத்தி. அன்று உப்பு சத்தியாகிரகத்தை காந்தியடிகள் செய்த போதும் அது புதுமையான உத்தியாக இருந்தது.
இன்று விளக்குகளை அணைத்து, இருட்டைச் சகித்துக் கொள்கின்ற இந்த லைட்ஸ் ஆஃப் சத்தியாகிரகமும் புதுமையான போராட்ட உத்தியே.