காசாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் கடுமையான தாக்குதல்கள் காரணமாக, மக்கள் அங்கங்கே உயிரிழப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் உடல்கள் பல அடிகள் உயரத்தில் பறந்து விழும் காட்சிகள் தற்போது உலக மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
உலகம் இதுவரை கண்டு கொள்ளாத வகையில் செயல்படும் அதிசக்தி வாய்ந்த குண்டுகள், இந்த தாக்குதல்களில் பயன்படுத்தப்படுவதால், பலர் உடலுடன் உடலாக சிதறி கீழே விழும் படங்களை பல ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்தக் காட்சிகள், பார்ப்போரை அதிர்ச்சியிலும், துக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது.
உலக நாடுகள் இந்தச் சம்பவங்களை கண்டித்து வருகின்றன என்றாலும், தாக்குதல்கள் தொடர்ந்தும் நிகழ்ந்துவருவது மனிதநேயக் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளது.
இந்தளவு தூரம் மனிதர்கள் சிதறி சின்னாபின்னமாகி வரும் காட்சிகளை இந்த உலகம் பார்த்துகொண்டிருக்கிறது.