இதுவரை 712 தேர்தல் முறைப்பாடுகள்: கடந்த 24 மணிநேரத்தில் 102 சம்பவங்கள் பதிவு

Date:

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் 102 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 15 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையங்களுக்கு 87 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

கடந்த மாதம் 20ஆம் திகதி முதல் இம் மாதம் 05ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 712 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவற்றில் வன்முறை செயற்பாடுகள் தொடர்பாக 04 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...