இந்தியா, பாகிஸ்தான் உட்பட 14 நாடுகளுக்கு சவூதியில் நுழைவதற்கான பல்தேவை விசாக்களுக்கு தற்காலிக தடை

Date:

பாகிஸ்தான் உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு வர்த்தகம், குடும்பம், சுற்றுலா ஆகிய பல்தேவைகளுக்கான விசா வழங்குவதை சவூதி அரேபியா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி அல்ஜீரியா, பங்களாதேஷ், எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈராக்,ஜோர்டான், மொராக்கோ, நைஜீரியா, பாகிஸ்தான், சூடான், துனிசியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தற்காலிக தடைக்குப் பின்னால் உள்ள பல முக்கிய காரணங்களை சவூதி அரேபியா அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

இதனடிப்படையில் சிலர் பல்தேவை விசாக்களைப் பயன்படுத்தி சவூதி அரேபியாவிற்குள் நுழைந்து ஹஜ் சீசன் வரை சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் இது அதிக போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகள் ஏற்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வணிக அல்லது குடும்ப வருகை விசாக்களில் நுழையும் பலர் அனுமதியின்றி வேலை செய்வதாகவும் விசா நிபந்தனைகளை மீறுவதுடன் தொழிலாளர் சந்தையில் இடையூறுகளை உருவாக்குவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, ஹஜ் சீசனில் பயணத்தை ஒழுங்குபடுத்தவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உள்ளதாக சவூதி வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

விசா விண்ணப்பதாரர்கள் புதிய விதிமுறைகளுக்கு இணங்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதுடன் அவ்வாறு செய்யத் தவறினால் தண்டனை விதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விசா கொள்கை விதிகள் சவூதி அரேபியாவின் 2030 தொலைநோக்கு இலக்குகளுடன் ஒத்துப்போகும் வகையில் இந்த புதிய விசாக் கொள்கைகள் அமைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நாடுகளிலிருந்து பல்தேவை விசாக்களில் வருபவர்கள் முறையாக நடந்துகொள்வதைப் பொருத்து இந்த விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எனவும்  அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Popular

More like this
Related

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...

சிறுவர்களுக்கான அன்றாட துஆக்கள் மற்றும் ஒழுக்கங்கள்: மும்மொழிகளில் புதிய நூல் வெளியீடு!

பிள்ளைகள் அன்றாட வாழ்வில் ஓத வேண்டிய துஆக்கள் மற்றும் அவர்கள் கடைப்பிடிக்க...