இந்திய பிரதமர் மோடிக்கு ஒரு கண் பார்வை இழந்த பெண் புலியின் புகைப்படத்தை பரிசளித்த சஜித்.!

Date:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பு  நேற்று சனிக்கிழமை (05) கொழும்பில் நடைபெற்றது.

இதன்போது,  நரேந்திர மோடிக்கு சஜித் பிரேமதாச சிறுத்தை புகைப்படம் ஒன்றை பரிசாக கொடுத்தார். இந்த புகைப்படம் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.

அதில், வில்பத்து தேசிய பூங்காவில் ஒரு கண் பார்வை இழந்த “ஐ-ஒன்” (eye-one) என அழைக்கப்படும் பெண் புலியின் இந்த சிறப்பு புகைப்படத்தை, சனிக்கிழமை (05) இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கொழும்பில் வழங்கியது பெரும் கௌரவமாகும்.

ஒரு கண் பார்வை இழந்திருந்தாலும், காட்டின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வாழும் இந்த சிறப்பான விலங்கு — இலங்கையின் இயற்கை பாரம்பரியம் மற்றும் அழகின் உண்மையான சின்னமாகும்.

அதன் கவர்ச்சிகரமான நீல கண் சவால்களை எதிர்கொண்டு அதன் வாழ்க்கை பற்றிய நீண்ட கதையை சொல்கிறது — ஒருவேளை குளுகோமா (glaucoma), கெடரெக் (cataract), அல்லது ஏதாவது விபத்து காரணமாக ஏற்பட்ட நிலை — ஆனால் அது காட்டில் பாதுகாப்பாக உறுதியாக இருப்பது விலங்குலகின் சவால்களை வெற்றிகொள்வதற்கான சின்னமாகும்.

எவ்வாறாயினும், துரதிருஷ்டவசமாக இந்த சிறப்பு விலங்கு கடந்த சில ஆண்டுகளாக காணப்படவில்லை, மேலும் அது உயிருடன் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...