விவாகரத்து வழக்கு ஒன்றில் 2 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் காதி நீதவான் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவின் புதல்வரின் விவாகரத்து வழக்கு தொடர்பிலேயே இலஞ்சம் பெறப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக தமது உத்தியாகத்தர்கள் கெலிஓயவிலுள்ள காதி நீதவானுடைய அலுவலகத்தில் வைத்து இன்று கைது செய்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.