கணேமுல்ல சஞ்சீவ கொலையில் ஈடுபட்டு தற்போது தலைமறைவாகியுள்ள இஷாரா செவ்வந்தியை தேடும் நடவடிக்கை நேற்று (01)மேற்கொள்ளப்பட்டது.
அனுராதபுர பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
அங்கு அவரைப் போல தோற்றமளித்த பெண்ணையும் (33) மற்றொரு ஆணையும் பொலிஸார் கைது செய்தனர். குறித்த நபர் இராணுவத்தில் பணியாற்றிய மேஜர் ஆவார்.
அவர்களிடம் இருந்து சுமார் 3.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐஸ், குஷ் மற்றும் கேரள கஞ்சா மற்றும் இரண்டு சொகுசு கார்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அனுராதபுரம் வாலிசிங்க ஹரிச்சந்திர மாவத்தையில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் இஷாரா செவ்வந்தி என்ற பெண் தங்கியிருப்பதாக புலனாய்வு அமைப்புகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, தலைமை ஆய்வாளர் நுவான் விக்ரமசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழு இந்த சோதனையை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது
எனினும் கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை பொலிஸாரால் கைது செய்ய முடியவில்லை.