ஹங்கேரி நாட்டுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சென்றுள்ள நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து அந்நாடு வெளியேறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா மீதான இஸ்ரேலின் போரில் ஏராளமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது.
இருப்பினும், பிரதமர் நெதன்யாகு ஹங்கேரியின் தீவிர வலதுசாரி பிரதமரான விக்டோர் ஆர்பனின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து ஹங்கேரி நாடு வெளியேறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.