உயிர்த்த ஞாயிறு: கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

Date:

ஏப்ரல் 20 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முப்படைத் தளபதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு)  அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்பான சூழலைப் பேணுவதற்கும் சிறந்த பாதுகாப்பை வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகளை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து மேற்கொள்ளுமாறும் பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் போது ஏற்பட்ட இடையூறு மற்றும் துயரம் மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலில் பொதுமக்கள் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளில் கலந்து கொள்வதை உறுதி செய்வதே பிரதான நோக்கம் என்று பாதுகாப்பு செயலாளர் மேலும் வலியுறுத்தினார்.

இதற்கு அமைவாக உயர்த்த ஞயிறு தினத்தை முன்னிட்டு மத அனுஷ்டானங்களை நடத்தும் தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, வெள்ளிக்கிழமை (18) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (20) சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பக்தர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு பொலிஸ் பாதுகாப்பை செயல்படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவுறுத்தியுள்ளார்.

இந்தக் காலகட்டத்தில் அதிக மக்கள் கூடும் தேவாலயங்களைக் கண்டறிந்து, அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பொலிஸாருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படை (STF) மற்றும் முப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...