உலக நாடுகளுக்கு அதிக அளவில் வரி விதித்த ட்ரம்பை கண்டித்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பாரிய போராட்டம்

Date:

அமெரிக்க ஜனாதிபதியின்  பொருளாதார கொள்கைகளுக்கு உலக அளவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகளிலும் ட்ரம்புக்கு எதிராக முக்கிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று கூடி பேரணி நடத்தி வருகின்றனர்.

வர்த்தக வரி விதிப்பு, அரசுப் பணிகளில் ஆட்குறைப்பு, மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எல்லை மீறி செயல்படுவதாக கூறி, வொஷிங்டன், நியூயோர்க், ஹுஸ்டன், ப்ளோரிடா, கொலராடோ, லாஸ் ஏஞ்சல் உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய நகரங்களில்   பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு ட்ரம்புக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு எதிரான மிகப் பெரிய ஆர்ப்பாட்டமாக இவ்வார்ப்பாட்டம் அமைந்துள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் 1200 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த ‘ஹென்ட்ஸ் ஒப்’ என்ற எதிர்ப்பு பேரணி போராட்டக்காரர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சமூகப் பிரச்சினைகள் முதல் பொருளாதாரப் பிரச்சினைகள் வரை ட்ரம்பின் நிகழ்ச்சி நிரலில் காணப்படும் குறைபாடுகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

 

அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் மீது வரிவிதிப்பு திடட்டத்தை அறிவித்த சில தினங்களுக்குள் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை பொஸ்டனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியவர்கள், அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் மீதான கைதுகள் மற்றும் நாடு கடத்தல்களுக்கு எதிராக தாம் இவ்வார்ப்பாட்டத்தில் பங்குபற்ற உந்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற நேற்று முன்தினம் (05) ட்ரம்ப் எந்தவொரு பொது நிகழ்விலும் கலந்து கொள்ளாது புளோரிடாவில் அவருக்குச் சொந்தமான ஒரு ரிசோர்ட்டில் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தார் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

டிரம்பின் நடவடிக்கை குறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், “ ஒரு சிலரின் விரும்பத்தகாத நடவடிக்கைகளால் மற்றும் மூர்க்கத்தனமான நிர்வாகத்தால் அமெரிக்காவின் நட்பு நாடுகளை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும், அவரின் செயல் இங்குள்ள மக்களுக்கும் பேரழிவை ஏற்படுத்துகிறது. அவர் (ட்ரம்ப்) நமது அரசமைப்பு முறையை அழிக்கிறார்” என்று தெரிவித்தனர்.

தற்போது இந்தப் போராட்டம் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியுள்ளது. அங்குள்ள மக்கள் ட்ரம்பின் தீவிர வர்த்தக கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டம் தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ” டிரம்பின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது: தகுதியான பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்பு, மருத்துவ உதவி ஆகியவற்றை அவர் எப்போதும் பாதுகாப்பார். ஜனநாயக கட்சியினரின் நிலைப்பாடு சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினருக்கு சமூகப் பாதுகாப்பு, மருத்துவ உதவி வழங்குவதாகும். அது இந்தத் திட்டங்களை திவாலாக்கி அமெரிக்க குடிமக்களை நசுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...