உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 14 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் நிறைவு

Date:

ஒரு கோடியே 10 இலட்சம் வாக்குச்சீட்டுக்கள்  இதுவரை அச்சிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 11 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் எதிர்வரும் 28 ஆம் திகதிக்குள் நிறைவடையும் என அரச அச்சகர் பிரதீப் புஷ்ப குமார தெரிவித்தார்.

50 வீத தபால் வாக்குச்சீட்டுகள் கிடைக்கப்பெறவுள்ளதாக தபால் மா அதிபர் பீ. சத்குமார கூறினார்.

இதேவேளை, கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 18 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளை  இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நீக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதற்கமைய குறித்த 18 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Popular

More like this
Related

QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை

நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...