காசா மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் இனப்படுகொலையை நிறுத்துமாறு கோரி நாளை (23) மாலை 3.00 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
பலஸ்தீனத்தில் இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கங்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.