‘சிரிய எதிர்கால இயக்கம்’ மற்றும் தர் அல்வாஹி அல் ஷெரீஃப் அறக்கட்டளை இணைந்து சிரியாவின் இட்லிப் நகரில் குர்ஆன் மனனம் செய்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வை கடந்த சனிக்கிழமை மிக விமர்சையாக நடத்தின.
இந்நிகழ்வின்போது புனித குர்ஆனை மனனம் செய்ததற்காக 1,493 ஆண்களும் பெண்களும் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் பல முக்கிய அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு குர்ஆனை மனனம் செய்தவர்களுக்கு தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இதன்போது சிரிய எதிர்கால இயக்கம் தெரிவித்ததாவது, புனித குர்ஆனை மனப்பாடம் செய்வது என்பது வெறும் வார்த்தைகளை மனப்பாடம் செய்வது மட்டுமல்ல, மனதை அறிவூட்டுவது, ஆன்மாவைச் செம்மைப்படுத்துவது, மற்றும் அதன் அனைத்து மக்களையும் அரவணைக்கும் ஒரு தாயகத்தில் சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு கலாச்சாரத்தை வளர்க்கும் உயர்ந்த மதிப்புகளில் வேரூன்றிய ஒரு தலைமுறையை வளர்ப்பது என்று நம்புகிறது.
இந்த ஆசீர்வதிக்கப்பட்ட முயற்சியை வழிநடத்துபவர்களின் முயற்சிகளைப் பாராட்டும் அதே வேளையில், சிரியா எதிர்கொள்ளும் சவால்கள் இருந்தபோதிலும், எதிர்கால சந்ததியினரின் பாதைகளை அறிவு மற்றும் நம்பிக்கையால் ஒளிரச் செய்து, ஒரு கலங்கரை விளக்காகத் தொடர்கிறது என்பதை சிரிய எதிர்கால இயக்கம் உறுதிப்படுத்துகிறது.
நம்பிக்கை மற்றும் அறிவின் ஒளியினை பிரதிபலிக்கும் நிகழ்வாக அமைந்தது.