கப்பல்களிலும், கொழும்பு துறைமுக நகரத்தில் கரை கடந்த சூதாட்ட விளையாட்டுச் செயற்பாடுகள் மற்றும் நிகழ்நிலையில் இடம்பெறும் சூதாட்ட விளையாட்டுச் செயற்பாடுகள் உள்ளிட்ட இலங்கையில் சூதாட்ட விளையாட்டுத் தொழிற்துறையை மேற்பார்வையிட ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (21) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2025.02.24 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்தின் பிரகாரம் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதற்கிணங்க சூதாட்ட விளையாட்டுக்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.