கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை

Date:

கொழும்பு மாநகர சபை உட்பட பல உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக மேலும் நடவடிக்கைகள் எடுப்பதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள் தங்கள் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்த ரிட் மனுக்களை விசாரிக்க அனுமதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

அதன்படி, இந்த மனுக்கள் மீதான ஆட்சேபனைகளை மே 5 ஆம் திகதி முன் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மேலும், மனுதாரர் ஏதேனும் ஆட்சேபனைகளை மே 7 ஆம் திகதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளதுடன் இதையடுத்து, மனு விசாரணை மே 16 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த திகதி வரை தொடர்புடைய இடைக்கால உத்தரவு அமலில் இருக்கும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...

செப். 25 – ஒக். 01 வரை சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனம்!

சிறுவர் தினத்தை முன்னிட்டு செப். 25 – ஒக். 01 வரை...

இலங்கைக்கு 963 மில்லியன் யென் மானிய உதவியை வழங்கியது ஜப்பான் அரசு!

இலங்கையின் பால் உற்பத்தித் துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், கடற்படையின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு...