கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார்.
88 வயதான போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக வத்திக்கான் அறிவித்துள்ளது.
கடந்த சில காலமாகவே உடல்நலக்குறைவால் போப் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் அவதிப்பட்டு வந்தார். அண்மையில் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்கிடையே வத்திக்கானில் உள்ள இல்லத்தில் போப் பிரான்சிஸ் உயிரிழந்தார்.
நேற்று ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு வத்திக்கான் சதுக்கத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மக்களை நோக்கி புனித பேதுரு பேராலயத்தில் இருந்தவாறு போப் பிரான்சிஸ் கையசைத்து ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.