தேசபந்துவை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் மூவரடங்கிய சிறப்பு விசாரணை குழு நியமனம்

Date:

சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேன தலைமையில் மூவரடங்கிய சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்புக்குழுவின் இணை உறுப்பினர்களாக நீதியரசர் (ஒய்வுநிலை) எம்.என்.பி.இத்தவெல மற்றும் தேசிய பொலிஸ் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் எம்.லலித் ஏக்கநாயக்க அங்கம் வகிக்கின்றனர்.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது பதவிக்கான அதிகாரங்கள் மற்றும் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக சபாநாயகரால் இந்த சிறப்பு குழு நேற்றைய தினம் நியமிக்கப்பட்டது. இந்த குழு நேற்றைய தினம் முதல் தடவையாக கூடி கலந்துரையாடியுள்ளது. இந்த குழு வெள்ளிக்கிழமை மீண்டும் கூடவுள்ளது.

2002ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கை முறை) சட்டத்தின் 5ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 3 (ஈ) மற்றும் 3(உ) பிரிவுகளுக்கு அமைய துர்நடத்தை மற்றும் பதவியின் அதிகாரம் மற்றும் தத்துவங்களை பாரதூரமான முறையில் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவது குறித்து ஆராய்வதற்கான சிறப்பு குழுவை அமைக்கும் யோசனை கடந்த 8ஆம் திகதி பாராளுமன்றத்தில்  ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...