எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பில் பாதுகாப்பை பலப்படுத்தப்படும் நோக்கில், சுமார் 6,000 பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸாருடன் இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினரும் (STF) பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.