இந்தியக் கட்டுப்பாட்டு காஷ்மீரில் பஹல்காம் பிரதேசத்திலுள்ள சுற்றுலாத் தளமான பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து சவூதிக்கான தனது இருநாள் விஜயத்தை பாதியில் முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இன்று நாடு திரும்பினார்.
விமான நிலையத்தில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவை அவசரமாக சந்தித்து பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் அவர் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், வெளிநாட்டு விவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு அமைச்சர் ரஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆகியோரை உள்ளடக்கிய பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவில் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது அமெரிக்கா மற்றும் பெரு விஜயத்தை மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தனது விஜயத்தை சுருக்கிக் கொண்டு கலந்து கொள்ளவுள்ளார்.
நேற்று நடைபெற்ற இத்தாக்குதலில் ஜக்கிய அரபு அமீரகம், நேபாளம் பிரஜைகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
2019ஆம் நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.