‘பாகிஸ்தான் மீது அடுத்த 24-36 மணி நேரத்திற்குள் இந்தியா தாக்குதல் நடத்தலாம்’ -பாகிஸ்தான் அமைச்சர்

Date:

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அடுத்த 36 மணி நேரத்திற்குள் இந்தியா எங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர் அச்சம் தெரிவித்திருக்கிறார்.

நேற்றிரவு இஸ்லாமாபாத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாக். தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அத்தாஉல்லா தரார், மேற்குறிப்பிட்டவாறு கூறியிருக்கிறார்.

அவர் பேசியதாவது, “பாகிஸ்தான் மீது அடுத்த 24-36 மணி நேரத்திற்குள் இராணுவ தாக்குதல் நடத்தலாம் என்று நம்பத்தகுந்த உளவுத்தகவல்கள் எங்களுக்கு கிடைத்திருக்கின்றன.

உறுதியான ஆதாரங்கள் இல்லாத, வெறுமென கட்டுக்கதைகளை ஆதாரமாக கொண்டு இந்த தாக்குதலை இந்திய இராணுவம் திட்டமிட்டிருக்கிறது. இந்தியா ஒரே நேரத்தில் மூன்று விஷயங்களை செய்கிறது. ஒன்று அதுவே விசாரணை நடத்துகிறது.

அந்த விசாரணையில் எங்கள் நாட்டை குற்றவாளிகளாக காட்டுகிறது. இந்தியா மீது குற்றச்சாட்டு இரண்டாவது, இந்த தீர்ப்பின் அடிப்படையில் தண்டனையை இந்தியாவே அறிவிக்கிறது.

அதேபோல மூன்றாவதாக, அறிவிக்கப்பட்ட தண்டனையை இந்தியாவே அமல்படுத்துகிறது. நாங்கள் நியாயமான விசாரணைக்கு, நடுநிலையாளர்களை கொண்ட நிபுணர்களை விசாரணைக்கு நியமிக்க தயார் என்றும், அப்படியான விசாரணை குழுவை இந்தியா உருவாக்கினாலும் அதற்கு ஒத்துழைக்க தயார் என்றும் கூறியிருந்தோம்.

அப்படி ஏதும் நடக்கவில்லை. நாங்களும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்தான்.எங்கள் எல்லையை பாதுகாக்கும் பொறுப்பை உணர்ந்திருக்கிறோம். எங்கள் மீது எந்த ஒரு தாக்குதல் நடந்தாலும், அதன் பின்னர் ஏற்படும் விளைவுகளுக்கு முழு பொறுப்பும் இந்தியாதான் ஏற்க வேண்டும். இதனை உலக நாடுகள் உணர வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

இந்த எச்சரிக்கை வெளியான அடுத்த சில மணி நேரத்தில்தான் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு துறையின் உயர் அதிகாரிகளை சந்தித்தார். இந்த சந்திப்பில், “பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது.

எந்த இடத்தில், என்ன நேரத்தில், எப்படியான தாக்குதலை நடந்த வேண்டும் என்பது உங்கள் விருப்பம். பயங்கரவாதிகள் யாராக இருந்தாலும், அவர்களை கண்டுபிடித்து, துரத்தி அழிப்பது நமது கடமையாகும்” என்று கூறியிருக்கிறார்.

Popular

More like this
Related

கஹட்டோவிட்டவில் MEPS & MLSC நடத்தும் முப்பெரும் விழா 2026.

கஹட்டோவிட்ட Muslim Ladies Study Circle  மற்றும் MEPS ஆகியவற்றின் ஏற்பாட்டில்...

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி...

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

நாடு திரும்பும் வழியில் தனது விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்காக, இலங்கை...

இஸ்லாத்தை விமர்சித்த வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஞானசார தேரர் ஆஜர்!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டதாகத் தாக்கல் செய்யப்பட்ட...