இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர், அல்-அக்ஸா பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்தமையும்,UNRWA மருத்துவமனை படுகொலையும் குறித்து சவூதி அரேபியா கடும் கண்டனம்.

Date:

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென் கிவிர்,  உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் போற்றப்படும் அல் அக்ஸா பள்ளிவாசலின் முற்றவெளிப் பகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்துள்ளார்.

இஸ்ரேல் மேற்கொண்டுவரும் காசா மீதான தொடர்ச்சியான போருக்கு மத்தியில், புதன்கிழமை (02)  பெருமளவான பாதுகாப்புப்படையினர் புடைசூழ  கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்தார்.

இந்நிலையில் இஸ்ரேலிய  பாதுகாப்பு அமைச்சர்  அல்-அக்ஸா பள்ளிவாசலுக்குள் நுழைந்து  வழிபாட்டாளர்களை வெளியேற்றியதற்கு  கடுமையான கண்டனத்தை சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், அல்-அக்ஸா பள்ளிவாசலில் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர்  பாதுகாப்புப் படையினருடன் நுழைந்து வழிபாட்டாளர்களை வெளியேற்றியதை சவூதி அரேபிய அரசு கடுமையாக கண்டித்துள்ளது.

அதேபோல் வடக்கு காசா பகுதியில் உள்ள ஜபாலியா முகாமில் உள்ள பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண முகமையுடன் (UNRWA) இணைந்த ஒரு மருத்துவமனையை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் குறிவைத்ததற்கும் சவூதி தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

மேலும், ஐ.நா. மற்றும் நிவாரண அமைப்புகளையும் அவற்றின் ஊழியர்களையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் சவூதி வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் இஸ்ரேலிய மீறல்களை சவூதி கண்டிப்பதுடன் ஜெருசலேமின் வரலாற்று மற்றும் சட்ட அந்தஸ்து  அதன் புனிதங்களுக்கு தீங்கு விளைவிக்கும் அனைத்தையும் திட்டவட்டமாக நிராகரிப்பதை உறுதிப்படுத்துகிறது.

மேலும் சர்வதேச சமூகம் இஸ்ரேல் தொடரும் போர் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்ரேல் தனது மீறல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் சவூதி அரசு வலியுறுத்தியுள்ளது. இதுபோன்ற தீவிரமான மீறல்களைத் தடுக்கத் தவறினால், அது சமாதான வாய்ப்புகளை குறைக்கும், சர்வதேச சட்டங்களின் நம்பகத்தன்மையை குறைக்கும், மேலும் பிராந்திய மற்றும் உலகளாவிய நிலைபேறுகளுக்கு தீங்கு விளைவிக்கும் என எச்சரித்துள்ளது.

பலஸ்தீன பிரதேசத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பென் க்விர் ஜனவரி மாதம் அமைச்சரவையில் இருந்து விலகினார்.

2022 ஆம் ஆண்டின் இறுதியில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கம் அமைக்கப்பட்டதிலிருந்து, பென் க்விர் அல்-அக்சா வளாகத்திற்கு பல முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இது ஒவ்வொரு முறையும் சர்வதேச எதிர்ப்பைத் தூண்டியது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...