பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளராக ஏ .பீ .எம் அஷ்ரப் நியமிக்கப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் இலங்கை நிருவாக சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தரும் இம்மாவட்ட சமூக, கல்விப் பணிகளில் நீண்ட காலமாக தலைமை தாங்கி பணியாற்றி வருபவரும் ஓய்வூதியத் திணைக்களம் உட்பட பல திணைக்களங்களில் பணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.