புதிய வரிகள் தொடர்பில் அமெரிக்கா-இலங்கை பேச்சுவார்த்தை: உத்தியோகபூர்வ அறிக்கை வெளியானது

Date:

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிகள் குறித்து இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்க விஜயத்தின்போது மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்து இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் பிரதிநிதிகள்   அமெரிக்காவின்  வர்த்தக பிரதிநிதித்துவ தூதுவர் ஜேமியேசன் கீறிரை  ஏப்ரல் 22ம் திகதி வொஷிங்டனில் உள்ள அவரது  அலுவலகத்தில் சந்தித்தனர்.

நிதியமைச்சராகவும் பதவி வகிக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் அறிவுறுத்தலின் படி அமெரிக்க அதிகாரிக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களையும் அவர்கள் கையளித்தனர்.

இலங்கை கடந்த காலத்தில் எதிர்கொண்ட சவால்கள் ,எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கும் முழுமையான பொருளாதார மீட்சியடைவதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இலங்கையின் தூதுக் குழுவினர் ஜேமியேசன் கிறீரிடம் எடுத்துரைத்தனர்.

வர்த்தக நிலுவை மற்றும் வரி மற்றும் வரி அல்லாத தடைகளை குறைப்பது குறித்து அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும் இலங்கை குழுவினர் எடுத்துரைத்தனர்.

இதேவேளை பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்காக இலங்கை முன்மொழிவுகளை முன்வைத்தமைக்கு தூதுவர் கிறீர் நன்றியை தெரிவித்தார்.

மேலும் நியாயமான சமமான வர்த்தக உறவுகளை உறுதி செய்வதற்காக இரண்டு நாடுகளிற்கு இடையில் விரைவில் ஒரு உடன்பாடு எட்டப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அதன் பின்னர் அன்றைய தினம் இலங்கை பிரதிநிதிகள் குழுவினர் அமெரிக்காவிற்கு எழுத்துமூலமாக வழங்கப்பட்ட சலுகைகள் குறித்து மேலும் விவாதிப்பதற்காக தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் உதவி வர்த்தக பிரதிநிதி பிரென்டன் லைன்ஞ் தலைமையிலான, தூதுவர் கிரீர் நியமித்த யுஎஸ்டிஆர் பிரதிநிதிகள் குழுவையும், தென்னாசியாவிற்கான இயக்குநர் எமிலி ஆஸ்பையினையும் சந்தித்தனர்.

இரண்டு நாடுகளிற்கும் இடையில் இரு தரப்பு உடன்படிக்கையை சாத்தியமாக்குவதற்காக பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கு இருதரப்பும் இணங்கின.

மிகக்குறுகிய காலப்பகுதிக்குள் உடன்படிக்கையை இறுதி செய்வதற்கான விருப்பத்தை இரு தரப்பும் வெளியிட்டன.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...