பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்: மே 16 அன்று சாட்சியங்களை ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு

Date:

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, உயிரிழந்த நிமேஷ் சத்சார என்ற 25 வயது இளைஞனின் மரணம் தொடர்பான நீதிவான் விசாரணையில் மே 16 ஆம் திகதி சாட்சியங்களை ஆராயுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டது.

குற்றப் புலனாய்வுத் துறை சமர்ப்பித்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

அடுத்த திட்டமிடப்பட்ட நாளில் முன்னிலையாகி சாட்சியமளிக்க ஐந்து சாட்சியாளர்களுக்கு அழைப்பாணை அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இறந்தவரின் உடல் நீதிமன்ற உத்தரவின்படி தோண்டி எடுக்கப்பட்டு, மூன்று பேர் கொண்ட மருத்துவக் குழுவால் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக சிஐடி அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சிஐடி மேலும் குறிப்பிட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் போது மேலதிக பரிசோதனைக்காக மாதிரிகள் கொழும்பு நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு (JMO) அனுப்பப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விசாரணையின் போது 22 சாட்சிகளிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், முதல் ஐந்து பேர் மே 16 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் சிஐடி தெரிவித்துள்ளது.

அதன்படி, கோரிக்கையை பரிசீலித்த நீதிவான், அடையாளம் காணப்பட்ட ஐந்து சாட்சியாளர்கள்குக அழைப்பாணை அனுப்ப அனுமதித்தார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...