போப் பிரான்சிஸின் மறைவுக்கான அனுதாபப் புத்தகத்தில், நாளை வரை கையெழுத்திடலாம்..!

Date:

கத்தோலிக்கத் திருச்சபையின் புனித போப் பிரான்சிஸின் மறைவையொட்டி இரங்கலை வெளிப்படுத்துவதற்காக கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள இலங்கைக்கான வத்திகான் தூதரகத்தில் விசேட அனுதாபப் புத்தகம் வைக்கப்பட்டுள்ளது.

அனுதாப புத்தகத்தில் கையெழுத்திடுவதற்காக வத்திக்கான் தூதரகம் நாளை காலை 10.30 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை திறந்திருக்கும்.

புனித போப் பிரான்சிஸின் மறைவை முன்னிட்டு, பாப்பரசரின் கொடியையோ அல்லது கத்தோலிக்க கொடியையோ கத்தோலிக்க சபை உள்ளிட்ட நிறுவனங்களில் அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கத்தோலிக்க திருச்சபை கோரியுள்ளது.

உலகளவில் அறியப்பட்ட  போப் பிரான்சிஸ்  88 வயதில் நுரையீரல் அழற்சி நோயால் 21ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இவருக்கு உலகளாவிய ரீதியில்அஞ்சலி நிகழ்வுகளும் நடைபெற்றுவருகின்றன.

Vatican Embassy in Sri Lanka
Address:220 Bauddhaloka Mawatha

Colombo 07 

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...