இனப்படுகொலை மற்றும் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தவர்: பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஹமாஸ் இரங்கல்

Date:

மறைந்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு உலகம் முழுவதும் இருந்து இரங்கல்கள் வலுப்பெற்றுள்ள நிலையில், கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிறிஸ்தவர்களுக்கு ஹமாஸ் இயக்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் ஹமாஸ், போப்பின் மறைவை “அமைதி, நீதி மற்றும் மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஓர்  ஆன்மீகத் தலைவரின் இழப்பு” எனக் குறிப்பிட்டுள்ளது.

பாப்பரசர் தனது பதவிக்காலம் முழுவதும், பலஸ்தீன மக்களின் துயரங்களை வெளிக்கொணர்ந்து , காசா மற்றும் மேற்கு கரை பகுதிகளில் பலஸ்தீனியர்கள் எதிர்கொள்ளும் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களை எதிர்த்த முக்கியமான குரல்களில் ஒருவராக இருந்ததாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

“ஆக்கிரமிப்பையும் இனவெறியையும் நிராகரித்த மிக முக்கியமான மதத் தலைவர்களில் ஒருவர் போப் பிரான்சிஸ். புரிதலுக்கும், மனிதநேயத்துக்கும் அவர் உரிய மதிப்பளித்தார்” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாப்பரசரின் செயல்கள் மற்றும் பேச்சுகள், உலகளாவிய மோதல்களுக்குத் தீர்வு காணும் நோக்கிலும், சமூக நீதிக்காகவும் அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகின்றன. இந்த அடிப்படையில், அவர் பல மனித உரிமை அமைப்புகளிடமிருந்து பெரும் அங்கீகாரம் பெற்றிருந்தார்.

குறிப்பாக காசாவில் இஸ்ரேலின் இராணுவப் பிரசன்னங்களின் போது பலஸ்தீனியர்களுக்கு எதிராக செய்யப்பட்ட அட்டூழியங்களை அவர் கண்டித்ததை ஹமாஸ் எடுத்துக்காட்டியது.

ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள் மற்றும் அநீதியால் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து உலகளாவிய ஒற்றுமையை அவர் வலியுறுத்தினார். பலஸ்தீன துன்பங்கள் குறித்த அவரது வலுவான நிலைப்பாடு  ஹமாஸ் உட்பட மனித உரிமைகளுக்கான பல ஆதரவாளர்களிடமிருந்து அவருக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது . ‘நீதி,  சுதந்திரம், மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை ஆதரித்ததற்காக அவர் அனைவராலும் பாராட்டப்பட்டார்.

மேலும் மறைந்த பாப்பரசர், மரபுகள், கலாச்சாரங்கள் மற்றும் மதங்களின் சகவாழ்வு மற்றும் பரஸ்பர மரியாதையை வளர்ப்பதற்கான நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தார் எனவும் ஹமாஸ் தனது அனுதாபச் செய்தியில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...