‘மனித உரிமைகள் மூலம் அமைதியைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் சர்வதேச மனித உரிமைகள் அமைதி மாநாடு 2025 கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி இடம்பெற்றது.
சர்வதேச மனித உரிமைகள் அமைதிப் பணி அமைப்பு இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது.
இம்மாநாட்டுக்கு சர்வதேச மனித உரிமைகள் அமைதிப் பணியின் நிறுவனர், ஆளுநர், மூத்த கணினி அறிவியல் விரிவுரையாளர், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முன்னாள் விரிவுரையாளர், ஸ்ரீ ராயல் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர், தேசிய கல்வி சேவை மன்றத்தின் நிறுவனர் மற்றும் தலைவர், ஸ்ரீ ராஜசிங்க சேனா அறக்கட்டளையின் இயக்குநர் ஜெனரல், வோரா சிட்டி கேம்பஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர், கிரேட் பிரிட்டனில் பதிவுசெய்யப்பட்ட லண்டன் விருதுக் கழகத்தின் நிறுவனர் மற்றும் தலைவர், ஆசியாவின் பெருமை விருது பெற்ற ஸ்ரீலங்காபிமானி கீர்த்தி ஸ்ரீ தேசமான்ய எமரிட்டஸ் பேராசிரியர் டாக்டர் சிந்தக சமன் குமார தலைமை தாங்கினார்.
இதன்போது “மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் மனித நேயத்தையும், அமைதியையும் கட்டியெழுப்புவோம்” என்ற கருப்பொருளின் கீழ் உருவாக்கப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் அமைதிப் பணி, மூலம் அமைதி செய்தியை உலகிற்கு எடுத்துச் செல்லும் என்பதோடு மனித உரிமைகள் விழிப்புணர்வை மேம்படுத்துதல், கல்வி மற்றும் சமூக நலத் திட்டங்கள் மூலம் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களிடையே மனித உரிமைகள் விழிப்புணர்வை அதிகரிப்பது, சமூக உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகளின் உரிமைகளுக்காக வாதிடும் திறனை உருவாக்குதல் மற்றும் கொள்கை மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகளில் செல்வாக்கு செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவ்வமைப்பின் செயற்பாடுகளின் சிலதாகும் என்று டாக்டர் சிந்தக சமன் குமார சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் அமைதி பணி செயலாளர் – ஸ்ரீலங்காபிமான்ய, தேசமான்ய, தேசபந்து,தேசகீர்த்தி, லங்கா திலகா, கீத்ரி ஸ்ரீ ஜனரஞ்சனா, லங்காபுத்ரா,சமூக சேவை கீர்த்தி, சமூக சேவை நலநோன்பு விஷாரதா, தூதுவர், பேராசிரியர்,டாக்டர். இர்ஷாத் அகமத் அவர்கள் இந்த அமைப்பின் மிஷன் தொடர்பில் கருத்துரை வழங்கினார்.
இந்த நிகழ்வில் அதிதிகளாக, பேபிளியான சுநேத்ரா தேவி ரஜமஹா விகாரை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ஸ்ரீ கல்யாணி சமகிரிதர்ம மகா சங்க சபை மற்றும் கல்கொட ஸ்ரீ மஹா விகாரை பார்ஸ்வே சங்க சபையின் பிரதம அமைப்பாளர் ஷாசன கீர்த்தி ஸ்ரீ சதர்ம வாகீஸ்வராச்சார தர்ம கீர்த்தி ஸ்ரீ தர்மதாஜ விசித்ரானக சுமண தம்ம தேரர்,
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பாலி மற்றும் பௌத்த கற்கைகள் துறைத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் அதி பூஜனிய எலமல் தெனியே சரனந்த நாயக்க மகா தேரோத்ரா, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் தர்ஷனபதி களுபஹன பியரதன தேரர்,
அமெரிக்க போதகர் மற்றும் கிண்டர் கலாச்சாரத்தின் தலைவர் போப் வோல்க்கர்,
அகில இலங்கை சூஃபி ஆன்மீக சங்கத்தின் (ACSSA) ஸ்தாபகத் தலைவர், தேஷ்மான்யா டாக்டர் எம்.முசின் அப்துல்லா மௌலவி,
பொலிஸ் திணைக்களத்தின் சட்டப் பிரிவின் பணிப்பாளர், பிரதான பொலிஸ் பரிசோதகர் சம்பத் பிட்டியகுபுர,
2023 ஆம் ஆண்டு இந்தியாவின் கோவாவில் நடைபெற்ற சர்வதேச இராஜதந்திர மாநாட்டில் சிறந்த பிரதிநிதியாக பெயரிடப்பட்ட இலங்கை உச்ச நீதிமன்றத்தின் சட்டத்தரணியும், ஆப்பிரிக்காவுடன் இணைந்த நைல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பதிவு செய்யப்பட்ட யூரேசிய வளாகத்தில் சட்டக் கற்கைகள் துறைத் தலைவர்.சாமக சமரகோன்,
அகில இலங்கை மஸ்ஜிதுல் உலமா (ACMU) தலைவர் தேச கீர்த்தி மௌலவி முஹம்மட் சிராஜுதீன், தஃப்தார் ஜெய்லானி முஹ்யித்தீன் மஸ்ஜித் (கூரகல குகை பள்ளிவாசல்) பொருளாளர் தேசபிரிதி முகம்மது சிக்கந்தர் ஸ்காலர்ஸ் தொண்டு அமைப்பின் தலைவர் (S.C.O) தேசமான்ய எம்.எஸ்.எம்.ஜிப்ரி,
பொரளை ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய பிரதம பூசகரும் பொரளை தெமட்டகொட கோவில்களின் புரவலருமான சர்வதேச பௌத்த சம்மேளன பொரளை பிரிவின் சமாதான குழுவின் பிரதான இந்து சமய ஆலோசகர் ஐக்கிய இலங்கை பிரத்யங்கிரா பீடத்தின் தலைவர் சமூக பொலிஸ் ஆலோசகர் ஐக்கிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் இந்து சமய பணிப்பாளர்,லங்காபுத்ரா கீர்த்தி எஸ். விநாயகன் குருக்கள்,
அகில இலங்கை சூஃபி ஆன்மீக சங்கத்தின் (ACSSA) நிறுவனர் மற்றும் செயலாளர் நாயகம் தேசமான்ய விஷாரத, டி.சிராஸ் சம்சுதீன் (எம்.பி.சி.எஸ்),
சர்வதேச மனித உரிமைகள் அமைதி பணி அமைப்பின் தலைமை ஆலோசகர் டாக்டர். பிரீதி குலதுங்க உள்ளிட்ட பெறும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.
சர்வதேச மனித உரிமைகள் அமைதி பணி அமைப்பின் சர்வேதேச மற்றும் இலங்கை அங்கத்தவர்கள், பிரதி பணிப்பாளர்கள் மற்றும் பணிப்பாளர்களுக்கான சான்றிதழ்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டதுடன், சிறப்பு உரைகளும், கலை நிகழ்வுகளும், இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச மனித உரிமைகள் அமைதிப் பணி என்பது சர்வதேச, பிராந்திய மற்றும் தேசிய மட்டங்களில் சுதந்திரம், கண்ணியம், சமத்துவம், நீதி மற்றும் பிற அடிப்படை மதிப்புகள் உள்ளிட்ட மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.
இந்த அமைப்பை உருவாக்குவதில் முன்னணியில் இருந்த அமைப்பு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் 123 ஆம் அத்தியாயத்தின் பிரிவு 3 இன் கீழ் பதிவுசெய்யப்பட்டதாகும்.